பாடசாலை கட்டிடம் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த 9 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிமடை, இந்துக் கல்லூரியில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலைக்கு அருகாமையில் உள்ள காணியில் இருந்த மிகப்பழமையான தென்னை மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. விபத்து தொடர்பில் வெளிமடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.Read More
(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன . குறித்த தொழிலாளியும் மற்றொரு தொழிலாளியும் நேற்றைய தினம் தோட்டத்தில் பள்ளத்தாக்கு […]Read More
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (14) பதற்றமான சூழல் நிலவியது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு மாத்திரம் என வைக்கப்பட்டிருந்த பெற்றோல் தனியார் ஒருவருக்கு முறையின்றி வழங்கப்பட்டதாக தெரிவித்து அங்கு கூடிய மக்கள் எரிபொருள் நிலைய ஊழியர்களுடன் முரண்பட்டனர். முச்சக்கர வண்டியினுள் கேன்களை வைத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான பெற்றோல் வழங்கப்பட்டதாகவும் இவ்வாறு மோசடியான முறையில் பெற்றோல் வழங்குவதால் வரிசையில் காத்திருப்போர் பெற்றோல் கிடைக்காமல் ஏமாற்றமடைவதாகவும் அங்கு கூடிய மக்கள் தெரிவித்தனர். இதன் போது […]Read More
(க.கிஷாந்தன்) தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் வசிக்கும் 692 குடும்பங்களுக்கு தோட்டத்தில் உள்ள பொது கட்டிடத் தொகுதியில் வைத்து தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசி 10 கிலோ கொண்ட பொதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு எரிவாயு தட்டுப்பாடு போன்றவற்றை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 10 கிலோ அரிசி மிகவும் உதவி […]Read More
நுவரெலியா பொலிஸாரால் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா ஆவேலியா பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வாவியில் (பெரேக் லேன் ஆவேலியா) இருந்து டி 82 ரக கிரேனைட் கைக்குண்டு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. நுவரெலியா ஆவேலியா பகுதியில் வசிக்கின்ற தொழிலாளி ஒருவர், வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த வாவிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை ஒன்றை நுவரெலியா நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக நுவரெலியா பொலிஸார் […]Read More
மூன்று நாட்களுக்குப் பின்பு தலவாக்கலையில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு 6 ஆயிரத்து 500 லீற்றர் மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டது. இதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலை முதல் 1800இற்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட வரிசையில் பசி பட்டினியுடன் காத்திருந்தனர். சிலர் வீதிகளில் அமர்ந்து இருந்ததோடு, சிறுவர்கள், பாடசாலை, மாணவர்கள், முதியோர்கள், நோயாளர்கள் என பலரும் காத்திருந்தனர். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது ஒருவருக்கு 250ரூபாய் மாத்திரமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. வெயிலுக்கு மத்தியிலும் பசி பட்டினியுடன் மக்கள் நீண்ட வரிசையில் […]Read More
கற்பாறைகள் சரிந்து வருவதால் உயிராபத்துக்கு மத்தியில் வாழ்கிறோம்; டொரிங்டன் மோர்கன் பிரிவு மக்கள்
அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட மோர்கன் பிரிவில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியை நோக்கி இன்று காலை பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன இதனால் அப்பகுதியில் வாழும் 20 குடும்பங்களைச் சேர்ந்த 70 இற்கும் மேற்பட்டவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இத் தோட்டத்தை சூழ பாரிய அளவிலான கற்பாறைகள் காணப்படுகிறன. மழைக்காலங்களில் அடிக்கடி கற்பாறைகள் சரிந்து வருவதாக இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் 50 இற்கும் […]Read More
பொகவந்தலாவை – கெம்பியன் கீழ் பிரிவு தோட்டத்தில் 03ஆம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் மண்சரிவு அபாயம் காரணமாக, நான்கு குடும்பங்களை சேர்ந்த 22 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என, பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 11 வீடுகளைக் கொண்ட லயக் குடியிருப்பு ஒன்றே மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தோட்ட உத்தியோகத்தர்களின் விடுதிகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் 11 சிறுவர்கள், 06ஆண்கள், 05 பெண்களும் உள்ளடங்குவதாகவும், அனர்த்தம் தொடர்பில் […]Read More
கொட்டகலை பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கொட்டகலையில் இடம்பெற்றது. சுப்பையா செல்லம் ஞாபகார்த்த கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில், தலைவர் எஸ்.பத்மராஜ் தலைமையில் கொட்டகலை சுகாதார பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் நூற்றுக்கும் அதிகமானோருக்கு இன்றைய தினம் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் சுப்பையா செல்லம் ஞாபகார்த்த கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட சமூக நல திட்டங்கள் […]Read More
மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி அட்டன் நகரின் மாணிக்கபிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த நிரப்பு நிலையத்திற்கு கடந்த 05ஆம் திகதி 6600 லீற்றர் மண்ணெண்ணெய் கிடைத்துள்ளதுடன், அந்த எரிபொருளை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, வரிசையில் கடைசியில் காத்திருந்த பெருந்தொகையான மக்களுக்கு அன்றைய தினம் மண்ணெண்ணெய் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இன்றைய தினம் மண்ணெண்ணெய் கிடைக்கும் என எரிபொருள் நிலைய ஊழியர்களால் […]Read More









