ஓடத்தண்ணியில முகங்கழுவி….. முந்தி தளப்புள முகம் தொடஞ்சி….. “செவ்வாழ குருத்தாட்டம்” செவந்து போய் வாரா தேல மல தாயொருத்தி……. “மவனோட இலட்சியந்தா அவளோட லட்சணமே…” பள்ளி செல்லும் பாலனுக்கு படிப்பெல்லா நல்லாருக்கு….. படிப்போட சேத்து இங்க வந்துருச்சி “காதலொன்னு” சின்ன சிறுசு ரெண்டு “கண்ணார பேசிக்கிரும்” கணக்கு பாடோ சொல்லயில ஒன்னு கொன்னு கண்ணால கணக்கு செய்யும்…. காதலுல ஊடலெல்லா இருக்குறது முக்கியந்தா முக்கியத்த….. அறியாம முண்டோ முட்டாலா போயிருச்சு….. நீர்த்தேக்க தண்ணியில முத்தெடுக்க போயிருச்சு காதலெனும் […]Read More
உலகில் இதயத்துடிப்பு முதல் நாடித்துடிப்பு வரையில் எல்லாம் இருக்கிறது இங்கு இருக்கும் எம்மவரின் ஆணவத்தால் என் இரத்தம் துடிக்கிறது. ஆறிவிக்கத் தெரியாமல் ஆசானகுவதும் அனுபவமே இல்லாத வரை அரசனாக்குவதும் அன்றாடம் புகழுக்காய் பொய் முகம் காட்டி சிரிப்பவரை கண்டால் என் இதயத்துக்கு செல்லும் குருதியல்லவா இம்சையில் துடிக்கிறது. உயர் பீடத்தில் இருக்கும் இறைவனை விடுத்து உயரமாக இருக்கும் எனும் எண்ணத்தில் தற்கால பதவிக்கு பரிதவிக்கும் பாசாங்கு மனிதர்களை எந்த பாசையில் சொல்வது எந்த துடிப்பில் நான் துயரப்படுவது. […]Read More
கூண்டுக்கிளிகளாய் நீயும் நானும் நீயோ இரும்புச்சிறையில் நானோ இதயச்சிறையில்…. நீயோ பறக்கமுடியாத உன் சிறகுகளோடு நானோ மறக்க முடியாத அவள் நினைவுகளோடு….. உன் மேல் காதல் கொண்டதால் சிறைபிடித்துள்ளான் ஒருவன்… நானோ ஒருத்தி மீது காதல் கொண்டு சிறையில் மாட்டிக்கொண்டேன் … உன்னை சிறைப்பிடித்தவனது எண்ணங்களிலே உன் வாழ்கை….. என்னை சிறைப்பிடித்தவளை எண்ணியே……. என் வாழ்கை. உனக்கு நீர் பழம் எல்லாம் கிடைத்தும் பறக்க முடியாமல் தவிக்கின்ற வேதனையை நான் அறிவேன்…… அனைவரும் என் அருகில் இருந்தும் […]Read More
எங்கள் ஏழை சமூகத்தில் எட்டப்பன் எங்கிருக்கான் – கண்டீர் எட்டி உதைத்திடுவீர் – அவன் மேல் எச்சில் உமிழ்ந்திடுவீர். உழைப்பு குடித்திடும் அட்டைகளை உக்கிரமான நெருப்பில் பொசுக்கிடுவீர் உரிமைகள் பறித்திடும் உருவங்களை உடல்- தலை வேறாய் பிரித்திடுவீர் அடங்கி போக மறுத்திடுவீர் அரசியல் காலடி வைத்திடுவீர் ஆண்டான் – அடிமை அழித்திடுவீர் அறம்தனை எதிர்த்தால் அகற்றிடுவீர் மாடுகள் வேசம் போட்டு கொண்டு ஓநாய்கள் கூட்டம் காத்திருக்கு தனி என பிரிவது நல்லதல்ல தமக்கென கேட்க இங்கு யாருமில்ல […]Read More
பேருந்தின் சாளரத்தின் ஓரத்தில்… வரமாய் ஒரு இருக்கை… சன்னலோர ஊதை காற்று…… ஏதோ ஒரு போதை தந்தாலும்… மனது பாரமாய் இருந்தது……. மலைகளுக்கு விடைகொடுத்து என் பயணத்திற்கு விடையளிக்க……… “சொந்த மண்ணை விட்டு” விடுகை பெறுகிறது பேரூந்து……… உறக்கம் இல்லை என்றாலும்…… விழிகள் உறக்கத்திற்கு ஒத்திகை பார்த்தது…………. “காலம் சூறாவளியாய் சுற்றுகிறது….” என்ன ஒரு வேகம்…… காலையில் அம்மாவின் அந்த ஆனந்த வார்த்தைகள்………. “எம் மவே கொழும்புல வேலை” “கொழும்பு போறான்” கேள்விகளே இன்றி யாருக்கோ விடையளித்துக் […]Read More









