காலத்தால் அழியாத நீண்ட வரலாற்றைக் கொண்ட அதிசயங்கள் படைப்புகள் பலவற்றை நாம் கேள்விப்பட் டுள்ளோம். நம் நாட்டிலும் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரப்பாலம் ஒன்று பதுளை மாவட்டத்தில் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டு தம்பதெனியக் காலத்தில் கட்டப்பட்ட போகொட மரப்பாலம் இலங்கையில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த மரப்பாலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பதுளையிலிருந்து ஹாலி- எல நகரத்தை நெருங்கிச் செல்லும் போது கலந்த ஓயாவின் ஒரு கிளைபிரிவு நதியான உமா ஓயா நதிக்கு மிக அருகாமையில் கண்டியையும் […]Read More
இலங்கை மீது அந்நியரின் பார்வைப் பட நம்நாட்டின் இயற்கை வளம் மட்டுமல்ல இலங்கையின் கலை அம்சங்களும் கூட நிச்சயம் ஒரு காரணமாக அமைந்ததெனலாம். இலங்கை மன்னர்கள் தான் வாழும் இடத்தை பாதுகாப்பு அரணாக அமைத்துக்கொள்வதில் செலுத்திய அக்கறைக்கு நிகராக நம் நாட்டிற்கே உரித்தான கலை அம்சங்களைக்கொண்டு அரண்மனைகளை அலங்கரிக்கவும் தவறவில்லை. அதற்கு இலங்கையின் புராதன சின்னங்களாக விளங்கும் அரண மனைகளே சாட்சி! அந்த வகையில் ஈழத்தின் கலை வரலாற்றில் இரண்டாவது சீகிரியா என வர்ணிக்கப்படும் இடமாக திகழ்கிறது […]Read More
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் அது ஞாலத்தின் மானப் பெரிது என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஒப்ப துட்டகைமுனு மன்னன் நன்றி செலுத்துவதற்காக கட்டுவித்தது தான் ரிதி விகாரை. குருநாகல் நகருக்கு வடகிழக்கி ரிதிகம என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த விகாரை. எல்லா விகாரைகளுக்கும் ஒரு தோற்றக் கதை இருக்கும். இந்த விகாரைக்கான தோற்றக்கதை மிகச் சுவாரஷ்யமானது. அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய துட்டகைமுனு கி.மு 161 முதல் கி.மு 137 வரை […]Read More
போர்த்துக்கீசர்களின் கட்டிடகலைகளின் சிறப்புகளை கூறும் வகையில் இலங்கையில் ஏராளமான கோட்டைகள் உள்ளபோதும் இலங்கையின் தனிச்சிறப்பை உலகம் அறியச்செய்தது காலி கோட்டை என்றால் மிகையாகாது. உலக அதிசயங்களுள் ஒன்றாக சேர்த்துக்கொள்வதற்கு பரிந்துரைசெய்யப்பட்ட நம் நாட்டின் கட்டிடம் என்பது இதன் இன்னொரு ஸ்பெஷல். இலங்கையின் தொன்மையானதும், தொல்பொருள் சின்னமானதுமான காலி கோட்டை போர்த்துக்கீசரினால் அமைக்கப்பட்டது. காலி நகரில் இருந்து 3.2 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது பாதுகாப்பு அரணான காலிக்கோட்டை. 1588 ஆம் ஆண்டு அதாவது 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் முதலில் […]Read More
கூலிகளாக இங்கே அழைத்துவரப்பட்ட அப்பாவி இந்தியத்தமிழர் அனுபவித்த துயரத்திற்கும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இலங்கையில் அமையப்பெற்ற ஒரு கோட்டை சாட்சிப்பதிவாக உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். காரைநகர் தீவுக்கும், வேலணைத் தீவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒடுங்கிய கடற்பகுதியில் சிறிய மணற்திட்டு ஒன்றில் அமைந்துள்ளது அம்மன்னீல்கோட்டை. பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் வருவதற்கான மிக முக்கிய கடல்வழிப்பாதையாக இது அமைந்துள்ளது. எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அரணாக அம்மன்னீல் கோட்டை போர்த்துகேயர்களால் அமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. […]Read More









